ஆங்கிரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் அன்ட் புரொடக்ஷன் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், ‘எனக்கு எண்டே கிடையாது’. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இன்னொரு முதன்மை கேரக்டரில் கார்த்திக் வெங்கட்ராமன் நடிக்க, ஹீரோயினாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜூ, முரளி சீனிவாசன், சக்திவேல் நடித்துள்ளனர். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய, கலா சரண் இசை அமைத்துள்ளார். ‘யாத்திசை’, ‘சந்திரமுகி 2’ ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.
படம் குறித்து விக்ரம் ரமேஷ் கூறுகையில், ‘இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஹீரோயின் பங்கேற்காததற்கு காரணம், அவரை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதுதான். ‘இந்தியன் 2’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இனிமேல் அவர் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் நடிப்பார் போலிருக்கிறது. நான் ஏற்றுள்ள கேரக்டர், ஒரேநாளில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும். அவரது வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடும் என்று நினைக்கும்போது, மீண்டும் புதிய விஷயம் தொடரும். அதனால்தான், ‘எனக்கு எண்டே கிடையாது’ என்ற டைட்டிலை இப்படத்துக்கு சூட்டினோம்’ என்றார்.