சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் படம் ‘மெட்ராஸ்காரன்’. மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படங்களில் ஷேன் நிகம் ஹீரோவாக நடித்தார். இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே படத்தின் கதை. திரில்லர் பாணியில் உருவாகிறது. பட ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது.
95