சென்னை: ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘கங்குவா’. சரித்திரக்கதை கொண்ட இது 3டியில் 10 மொழிகளில் உருவாகிறது. வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, தேவி பிரசாத் இசை அமைக்கிறார். சிவா இயக்குகிறார். இப்படத்தின் கிளிம்ஸ் நேற்று சூர்யா பிறந்தநாளையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. இதில் சூர்யாவின் வித்தியாசமான தோற்றமும், அருண்ராஜா காமராஜின் பின்னணி குரலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. படம் பற்றி நிருபர்களிடம் சிவா கூறும் போது, ‘1,500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை உள்ளடக்கி படமாக்குகிறோம். கங்கு என்றால் நெருப்பு. எனவே, ‘நெருப்பின் மகன்’ என்ற அர்த்தத்திற்காக ‘கங்குவா’ என்று பெயரிட்டோம். சூர்யா கடினமாக உழைத்துள்ளார். படத்தை பிரமாண்டமாகவும், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரமாகவும் உருவாக்கி வருகிறோம்’ என்றார்.
69