கரண், வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’, கதிர் மற்றும் ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’, கஸ்தூரி நடித்த ‘இ.பி.கோ 302’ ஆகிய படங்களை தொடர்ந்து சலங்கை துரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘கடத்தல்’. பிஎன்பி கிரியேஷன்ஸ், பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க, சவுத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் சார்பில் செங்கோடன் துரைசாமி, எம்.ஆர்.தாமோதரன், ரமேஷ் விஜயசேகர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜ்செல்வா ஒளிப்பதிவு செய்ய, எம்.காந்த் இசை அமைத்துள்ளார்.
பாவலர் எழில்வாணன், இலக்கியன், சக்தி பெருமாள் பாடல்கள் எழுதியுள்ளனர். எம்.ஆர்.தாமோதரன், விதிஷா, ரியா, சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் படமான இது விரைவில் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.