சென்னை: கதையின் நாயகனாக நட்டி நடித்துள்ள படம், ‘வெப்’. ஹாரூண் இயக்கியுள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இதை வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்து உள்ளார். வரும் ஆகஸ்ட் 4ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து நட்டி கூறியதாவது: இந்தப் படத்தின் இயக்குனர் ஹாரூண் முதல் காட்சியைப் படமாக்கும்போதே அவர் அதிக திறமை யானவர் என்பதை தெரிந்துகொண்டேன். இன்றுள்ள சமூக சூழ்நிலையில் பலர் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று சில விஷயங்களில் ஈடுபடுகின்றனர். ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் அது என்பதை பற்றி சொல்லும் படமாக ‘வெப்’ உருவாகியுள்ளது.
56