சென்னை: சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள படம், ‘சிகாடா’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஷால் வெளியிட்டார். மேலும், கதையைப் பற்றி அறிந்த அவர், படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நேரடியாகப் படமாகியுள்ள இப்படத்தை இசை அமைப்பாளர் ஜித் எடவானா இயக்கியுள்ளார். 4 மொழிகளுக்கும் சேர்த்து 24 டியூன்களை உருவாக்கியுள்ளார். தீர்னா பிலிம்ஸ் அன்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் வந்தனா மேனன், பி.கோபகுமார் தயாரித்துள்ள இப்படத்தில் சி.ஆர்.ரஜித், ஜாய்ஸ் ஜோஸ், காயத்ரி மயூரா உள்பட பலர் நடித்துள்ளனர்.