மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருண்மொழி வர்மனின்(ஜெயம்ரவி) ஜோடி வானதியாக நடித்தவர் சோபிதா துலிபாலா. தற்போது ‘மங்கி மேன்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தி லாஸ்ட் பேபி, தி கிரீன் நைட், ஹோட்டல் மும்பை, லயன், ஒன்லி யஸ்டர்டே உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ள தேவ் பட்டேல் இயக்குகிறார். அவரே நாயகனாக நடிக்கவும் செய்கிறார். ஷர்ட்லோ காப்லி என்ற அமெரிக்க நடிகர் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ஒரு மனிதனுக்கு ரத்தவெறி பிடித்த ஒரு குரங்கின் குணாதிசயம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய கதை. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. ஆங்கிலத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இதுதவிர ஏற்கெனவே ‘நைட் மானேஜர்’ வெப் தொடரில் நடித்துள்ள சோபிதா அதன் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். தற்போது இதன் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் சோபிதா.