சென்னை: ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ள படம், ‘கள்வன்’. ஒளிப்பதிவு செய்து பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜூன், சிவகுமார் முருகேசன் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ரமேஷ் அய்யப்பன், பி.வி.சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். ரேவா பின்னணி இசை அமைத்துள்ளார். ராஜேஷ் கண்ணா கூடுதல் வசனம் எழுதியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்தது.
இந்நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சினேகன், ஏகாதசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம் பாடல்கள் எழுதியுள்ளனர். முக்கிய வேடங்களில் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலசந்திரன், தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா, நிவேதிதா நடித்துள்ளனர். ஏற்கனவே பாலா இயக்கிய ‘நாச்சியார்’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா ேஜாடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.