சென்னை: டாடா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கவின், தனது நீண்ட கால காதலியை கரம் பிடிக்கிறார். நட்புன்னா என்னான்னு தெரியுமா, லிஃப்ட், டாடா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் கவின். இவர், மோனிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து வரும் 20ம் தேதி கவின், மோனிகா திருமணம் நடைபெற உள்ளது. இத்தகவலை கவின் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
167