இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். நடிகராக தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு கிங்ஸ்டன் என தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வந்த நிலையில் இப்போது படக்குழு அதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். கமல் பிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார், திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்து, தனது பேர்லல் யூனிவரஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். பேண்டஸி படமாக உருவாகிறது.