சென்னை, ஏப்.11: பிரபல ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், ‘சென்னை ஸ்டோரி’. இதில் ஹீரோயினாக நடிக்க முதலில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். டிமேரி என் முராரியின் ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்
படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடக்க இருந்த நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக சமந்தா விலகினார்.
இதையடுத்து ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகி, அனு என்ற டிடெக்டிவ் கேரக்டரில் நடிப்பதாக தகவல் வந்தது. இங்கிலாந்து நடிகர்கள் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ நடிப்பதாகவும் கூறப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாகவும், ஹாலிவுட் படத்தில் நடிப்பது அதிக உற்சாகத்தை அளிப்பதாகவும் பதிவு வெளியிட்டிருந்த ஸ்ருதிஹாசன், தற்போது படத்தில் இருந்து திடீரென்று விலகியிருக்கிறார். ஆனால், அதற்கான காரணத்தை இதுவரை அவர் தரப்பு தெரிவிக்க வில்லை.