சென்னை: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் கூறியது: விடுதலை 2 பட வேலைகள் முடிந்தவுடன் வாடிவாசல் பட வேலைகள் முழு வீச்சில் தொடங்கும். கொரோனாவுக்கு முன்பே சூரியை வைத்து ஒரு படம் இயக்க இருந்தேன். வேலை தேடி செல்லும் ஒரு இளைஞனின் கதையாக அது இருந்தது. கொரோனா நேரத்தில் அதன் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகே விடுதலை படத்தை தொடங்கினேன். விடுதலை 2 வெளியானதும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும். மேலும், இந்த படத்தில் ரோபோ காளை இடம்பெற உள்ளது. அதற்கான பணிகள் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. வடசென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து விஜய் படத்தை இயக்க உள்ளேன். அதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன் என்றார்.
68