கொச்சி: மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘மலைக்கோட்டை வாலிபன்’. இதன் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்தநாளில், படத்தின் வெளியீட்டு தேதியை மோகன்லால் அறிவித்தார். அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது. புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பி.எஸ்.ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசை அமைத்துள்ளார். மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா, ஜான் அன்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.
94