49 வயதாகும் பாலிவுட் முன்னணி நடிகை கஜோல் மீண்டும் திரைப்படத்திலும், வெப்சீரிசிலும் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘லஸ்ட் ஸ்டோரி’ 2ம் பாகம் ஓடிடியில் வெளியானது. இதில் அவர் படுக்கையறைக் காட்சியில் தாராளமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர் நடித்த ‘ட்ரையல்’ என்ற வெப்தொடர் வெளியாகியுள்ளது.
இதில் தன்னைவிட வயது குறைந்த ஒரு நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ‘இந்த வயதில் கஜோல் இப்படி நடிக்கலாமா?’ என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வேறு சிலர், ‘முத்தம் கொடுக்க வயது தடை இல்லை’ என்று கஜோலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.