சென்னை: மோகன்லாலின் ‘விருஷபா’ பட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான்-இந்தியா ஆக்சன் படமாக உருவாகும் ‘விருஷபா’ படத்திலிருந்து, மோகன்லாலின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். தற்போது இணையத்தில் இது வைரலாகியுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில், கையில் வாளுடன், கோபமான பார்வையுடன் தோற்றமளிக்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் சரித்திர படமாக இது உருவாகிறது. விருஷபா படத்தில் மோகன்லாலுடன் ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், காந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டில் ரிலீசாக உள்ளது. விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்), (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.