ஐதராபாத்: பிரபாசின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிச.22ம் தேதி வெளியாகிறது. இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அடுத்து நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ‘ராஜா டீலக்ஸ்’, ‘ஸ்பிரிட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஏராளமான பாலோயர்களை கொண்ட அவர் இன்ஸ்டா பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் கணக்கை யார் முடக்கியது என்பது தெரியவில்லை என்றும் இது தொடர்பாக தொழில்நுட்ப குழுவிடம் பிரபாஸ் தரப்பு புகார் அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
46