விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தை தயாரித்த செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரில்லர் கதை கொண்ட ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘படை வீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய தனா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஹீரோயினாக ரியா சுமன் நடித்துள்ளார். மற்றும் சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் நடித்துள்ளனர். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் ஒருவனின் கதையாக ‘ஹிட்லர்’ உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள ரியா சுமன், தமிழில் ‘சீறு’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘மன்மத லீலை’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘ஹிட்லர்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.