மும்பை: யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர் 3’ டிரைலரை அக்டோபர் 16ம் தேதி இப்பட ஹீரோ சல்மான் கான் வெளியிட இருக்கிறார். சல்மான்கான் கூறும்போது, ‘யஷ்ராஜ் பிலிம்ஸில் உருவான ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஸ்பை யுனிவர்ஸ் படங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் பார்வைக்கு விருந்தாக புதிதாக, தனித்துவமான ஆச்சர்யமான சிலவற்றை கொடுக்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. டைகர் 3 படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர். மனீஷ் ஷர்மா இயக்கியுள்ள இந்த டைகர் 3 படத்தின் டிரைலருக்கு இணையத்தில் வெறித்தனமான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நானும் ஒரு பங்காக இருக்க விரும்பினேன். மேலும் அந்த காட்சிகளில் நான் நடித்தபோது ஒரு குழந்தையை போலவே மாறிவிட்டேன். இதுபோன்ற மிகப்பெரிய தருணங்களுடன் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக டைகர் 3 டிரைலரை நாங்கள் வெளியிடும்போது படத்தை விளம்பரப்படுத்தும் எங்களது அடுத்த சொத்தாக அது அமையப்போகிறது’ என்றார்.