சென்னை: தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், ‘ரத்னம்’. மற்றும் சமுத்திரக்கனி, யோகி பாபு, பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், ராமச்சந்திர ராஜு நடித்துள்ளனர். ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்தி கேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன், கல்யாண் சுப்பிரமணியம் இணைந்து தயாரித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 26ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘டோன்ட் வொரி டோன்ட் வொரிடா மச்சி’ என்ற பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்தது.
அப்போது ஹரி பேசியதாவது: நான் இயக்கியுள்ள 17வது படம், விஷாலுடன் இணைந்த 3வது படம், தேவிஸ்ரீ பிரசாத்துடன் பணியாற்றிய 6வது படம் என்ற பெருமை கொண்ட ‘ரத்னம்’ படத்தில் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. விஷாலுடன் இணைந்து முழுநீள ஆக்ஷன் படத்தை அளிக்க விரும்பினேன். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களில் ஆக்ஷன், பேமிலி சென்டிமெண்ட் அதிகமாக இருந்தது. ‘சாமி’, ‘சிங்கம்’ ேபான்ற படங்களின் பாணியில், அதிரடி ஆக்ஷன் படமாக ‘ரத்னம்’ உருவாகியுள்ளது. விஷாலின் நடிப்பும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களால் பேசப்படும்.