எம் 360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்க, பி.திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார், விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.
மலையாள நடிகர்கள் சித்திக், ஆர்.நந்தா, சிங்கம்புலி, ஜார்ஜ், கும்கி அஸ்வின் நடிக்கின்றனர். குமார் தர் ஒளிப்பதிவு செய்ய, வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார். மணி அமுதன் பாடல்கள் எழுதுகிறார். ராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகிறது.