சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசனும், அவரது நீண்டகால காதலரும், டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவும் தங்களது காதலை முறித்துக்கொண்டனர். ஸ்ருதிஹாசன், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிகாவை பல ஆண்டுகளாக காதலித்தார். அசாம் மாநிலம், கெளகாத்தி நகரைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா ஓவியம் மற்றும் டிசைன் செய்வதில் வல்லவர். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஸ்ருதி ஹாசனுடன், லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார் சாந்தனு ஹசாரிகா. இது கமல்ஹாசனுக்கும் தெரியும். சாந்தனுவை அவரும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் தற்போது பிரிந்துவிட்டது உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வாழ்க்கையை பற்றி விரக்தியுடன் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ருதி. இந்நிலையில் சாந்தனுவுடன் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டார். சாந்தனுவும் ஸ்ருதியின் புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதற்கு முன்பு லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்பவருடன் ஸ்ருதி வாழ்ந்து வந்தார். அவரை பிரிந்த பிறகுதான் சாந்தனுவை காதலித்தார். இவர்கள் இருவருக்கும் முன்பாக நடிகர் சித்தார்த்தை அவர் காதலித்து பிரிந்தார்.