மும்பை: முன்னாள் காதலன் ரோஹ்மன் உறவில் இருந்து பிரிந்த சுஷ்மிதா சென், தீபாவளி பார்ட்டி ஒன்றில் இருவரும் உற்சாகமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் தவுராணி ஏற்பாடு செய்திருந்த தீபாவளி பார்ட்டிக்கு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் சென்றிருந்தார். இந்த பார்ட்டியில் சுஷ்மிதா சென்னின் முன்னாள் காதலர் ரோஹ்மன் ஷாலும் கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நின்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான அந்த வீடியோவில், சுஷ்மிதா சென் கருப்பு நிற சேலை அணிந்திருந்தார். அவரது முன்னாள் காதலன் ரோஹ்மன் ஷால் வெள்ளை நிற பாரம்பரிய உடை மற்றும் பிளேசர் அணிந்திருந்தார். புகைப்படக்காரர்களுக்கு ேபாஸ் கொடுப்பதற்காக சுஷ்மிதாவின் கைகளை ரோஹ்மன் பிடித்துக் கொண்டார். இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு போஸ் கொடுத்தனர். முன்னதாக சுஷ்மிதா சென்னும், ரோஹ்மன் ஷாலும் காதலர்களாக இருந்தனர். இருவரும் டேட்டிங்கில் இருந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் இருவரும் பிரிந்தனர். அதன்பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இருவரும் சேர்ந்திருப்பதால், மீண்டும் அவர்கள் டேட்டிங்கில் இணைந்துவிட்டனரா? என்ற கேள்வி பாலிவுட்டில் எழுந்துள்ளது.