சென்னை: அதோமுகம் என்ற பெயரில் படம் உருவாகிறது. ‘அதோமுகம் என்றால் பழந்தமிழ் வார்த்தைப்படி மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும்போது என்னவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக சொல்லும்’ என்கிறது படக்குழு. சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் சுனில் தேவ், ஒளிப்பதிவு அருண் விஜயகுமார், எடிட்டர் விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன். இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம், தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.