தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘தருணம்’ . கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம்.
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்’ திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.
முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் சகிதமாக உருவாகியுள்ள ‘தருணம்’ படத்தில் ஹீரோவாக கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ளனர். முதல் படம் திரில்லர், இன்வெஸ்டிகேஷன் என அருள்நிதி நடிப்பில் ‘தேஜாவு’ படத்தில் மாஸ் காட்டிய இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இந்தப் படத்தில் முதல் க்ளிம்ஸிலேயே லிப்லாக் காட்சியுடன் அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். எங்கும் இப்போது கிஸான் மற்றும் ஸ்ம்ருதிதான் டாக் ஆஃப் த டவுன்.