சென்னை: ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்திருந்த ‘ராட்சசி’ என்ற படத்தை இயக்கிய சை.கவுதமராஜ் தற்போது இயக்கியுள்ள படம், ‘கழுவேத்தி மூர்க்கன்’. இதில் கிராமத்து இளைஞனாக, விவசாயி கேரக்டரில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ‘சார்பட்டா பரம்பரை’ துஷாரா விஜயன் நடித்துள்ளார். முக்கியமான வேடங்களில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஷ்காந்த் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்க, இமான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து இப்படம் வரும் 26ம் தேதியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
75