சென்னை: கலகலப்பான டார்க் காமெடி படமாக வாஸ்கோடகாமா உருவாகியிருக்கிறது. கதாநாயகனாக சற்று இடைவெளிக்குப் பின் நகுல் நடித்து வெளியாகும் படம் இது. கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். இவர் ஏற்கனவே செம படம், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர். வம்சி கிருஷ்ணா வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பயில்வான் ரங்கநாதன், நமோ நாராயணன், மதன் பாபு, வாசு விக்ரம், செல் முருகன், புஜ்ஜி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆர்.எஸ்.சிவாஜி, லொள்ளு சபா மனோகர், படவா கோபி, சேஷு என்று தங்களது நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஏராளமான நட்சத்திரங்களைக் கூட்டணி சேர்த்துக்கொண்டு இப்படத்தை ஆர்.ஜி.கே என்கிற ஆர் ஜே கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு என்.எஸ். சதீஷ்குமார், இசை என்.வி .அருண், கலை இயக்கம் ஏழுமலை ஆதிகேசவன், படத்தொகுப்பு தமிழ்குமரன் என்று தொழில்நுட்ப அணியில் இணைந்துள்ள அனைவருமே புதுமுகங்கள். இப்படத்தை மலேசியாவில் பல தொழில் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர் டத்தோ பி .சுபாஸ்கரன் 5656 புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கோடை விடுமுறையில் படம் வௌியாகிறது.