சென்னை: வெங்கட் பிரபு இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடிக்கிறார். இதில் அவருக்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஹீரோயின்களாக ஜோதிகாவும், பிரியங்கா மோகனும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அப்பா விஜய்க்கு ஜோடியாகவும் இன்னொரு விஜய்க்கு தாயாகவும் நடிக்கவே ஜோதிகாவிடம் பேசப்பட்டது. ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதால், சிம்ரனை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில் சினேகா நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபு தேவா இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. விஜய் 68 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் அதிகாரபூர்வமாக வெளியாகும்.
43