சென்னை: ராதாமோகன் இயக்கும் வெப்சீரிஸில் வாணி போஜன் நடிக்கிறார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், கவுரவம், பொம்மை உள்பட பல படங்களை இயக்கியவர் ராதாமோகன். முதல்முறையாக வெப்சீரிஸ் இயக்குகிறார். இதை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. வாணி போஜன் மற்றும் யோகிபாபு முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா, குழந்தை நட்சத்திரங்கள் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த வெப்சீரிஸ் தொடருக்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதனுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸ் இந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளது.
65