சென்னை: அப்புக்குட்டி, ‘நாடோடிகள்’ பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, ‘யாத்திசை’ சித்து குமரேசன். குட்டி கோபி, ஃபிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்குமார், பழனிச்சாமி நடித்துள்ள படம், ‘ஜெர்க்’. இதை 2கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஆலன் பரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் குமார் இசை அமைக்க, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். குரு இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘மலைப்பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், மண்ணையும் பல தலைமுறைகளாகப் பாதுகாத்து வரும் மக்கள், முதலாளித்துவத்தால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்தொடர்பு இல்லாத தமிழகத்தின் முக்கியமான மலைப்பிரதேசத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். ஊட்டியிலுள்ள அடர்ந்த மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘நீல மலையே’ பாடலை தேசிய விருது பெற்ற நஞ்சம்மாள், ‘உன்னை போல யாருமில்ல’ பாடலை வைக்கம் விஜயலட்சுமி, ‘மஜா மஜா’ பாடலை செந்தில் ராஜலட்சுமி பாடியுள்ளனர்’ என்றார்.
182