சென்னை: லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஸர்பைஜானில் சமீபத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜித்தின் தோற்றம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.