லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுக்க ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர், 51 வயதான ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ். ‘தி மாஸ்க்’, ‘தி ஹாலிடே’, ‘சார்லிஸ் ஏஞ்சல்ஸ்’, ‘நைட் அன்ட் டே’ உள்பட நிறைய வெற்றிப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் அவர், டி.வி தொடர் மற்றும் வீடியோ ஆல்பங்களிலும் தோன்றியுள்ளார்.
கடந்த 2015ல் தன்னைவிட 6 வயது குறைந்த இசைக்கலைஞர் பென்ஜி மேடன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2019ல் வாடகைத்தாய் மூலமாக ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த கேமரூன் டயஸ், தற்போது அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, மகனுக்கு கார்டினல் மேடன் என்று பெயரிட்டு உள்ளதாக கூறினார்.