இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. ‘விருமன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்து வதுருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ‘வண்ணாரப்பேட்டையில…’ என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார். முறைப்படி இசை கற்றுள்ள அதிதி நடிக்க வருவதற்கு முன்பே தமன் இசையில் ‘ஞானி’ படத்தில் பாடிய ‘ரோமியோ ஜூலியட்’ பாடல் ஹிட்டானது.
அடுத்தடுத்து வரும் படங்களிலும் பாடல், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறார். அப்பா இயக்கும் படத்தில் நடிப்பீர்களா? பாடுவீர்களா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் ‘எனது அறிமுகத்திற்கு அப்பாவின் பெயர் தேவைப்பட்டது உண்மைதான். இனி நான் என் திறமையால்தான் வாய்ப்புகளை பெற வேண்டும். அப்பா என்பதற்காக நடிக்கவோ, பாடவோ அவரிடம் வாய்ப்பு கேட்க மாட்டேன். இரண்டுக்குமே அவர் என்னை அழைக்க வேண்டும். அதற்குரிய திறமையை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.