சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள படம், மே 5 முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. இப்படம் தியேட்டர்களில் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின்போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் இப்படம்.
சௌபின் ஷாஹிர், நாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சிதம்பரம் இயக்கியுள்ளார். சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.