ஐதராபாத்: முதலில் நேரடியாக ஒரு மொழியில் படத்தை உருவாக்கி, பிறகு அதை பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக மாற்றும் வித்தை சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. தற்போது விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் பெட்லா இணைந்துள்ள பெயரிடப்படாத பான் இந்தியா படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 13வது படம், வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 54வது படமாகும். தில் ராஜூ, சிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பு பொறுப்பை வாசு வர்மா ஏற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா, பரசுராம் பெட்லா மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான மிருணாள் தாக்கூர், பாலிவுட் படவுலகில் தனக்கு ஓரளவு வரவேற்பு குறைந்துள்ள நிலையில், தெலுங்கு படவுலகை உறுதியாகப் பிடித்துக்கொண்டார்.
67