ஆஹா தளத்தில் ஒளிபரப்பாகும் ‘வேற மாறி ஆபிஸ்’ என்ற தொடர் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஷ்ணு விஜய், ஆர்ஜே விஜய், விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, ஷியாமா, லாவண்யா, விஜே பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன், கண்ணதாசன், சஞ்சீவ், இயக்குனர் சிதம்பரம் மணிவண்ணன், தயாரிப்பாளர் சிவகாந்த் பங்கேற்றனர். அப்போது சிதம்பரம் மணிவண்ணன் பேசுகையில், ‘இது பலபேருக்கு முதல் மேடை. இதற்கு முன்பு நான் மூன்று வெப்தொடர்கள் இயக்கியுள்ளேன். ‘வேற மாறி ஆபிஸ்’ தொடரில் நடித்த அனைவரும் பிஸியானவர்கள். வி.ஜே, ஆர்ஜே, ஸ்டேண்ட்-அப் காமெடியன்கள், சீரியல் நடிகர், நடிகைகள் அனைவரையும் ஒன்றிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. உதவி இயக்குனர்கள் சிறப்பாகப் பணியாற்றி என் வேலைப்பளுவை குறைத்து உதவினர்’ என்றார். ஆர்ஜே விஜய் பேசும்போது, ‘இதில் என்னை தேர்வு செய்யும்போது, ‘நீங்கள்தான் முக்கியமான கேரக்டர். உங்களை வைத்துதான் முழு கதையும் நகர்கிறது’ என்றனர். விக்கல் விக்ரம் என்னிடம் இதே டயலாக்கை சொன்னான். அப்போதுதான் அனைவரையும் ஒரே டயலாக் பேசி ஓ.கே செய்த ரகசியம் தெரிந்தது. ஐ.டி துறையில் பணியாற்றியவன் என்பதால், இத்தொடரின் கதையை என் வாழ்க்கையுடன் ஒப்பிட முடிந்தது’ என்றார்.
41