Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டெவில் படத்தில் சம்யுக்தா

ஐதராபாத்: நந்தமுரி கல்யாண் ராம், ‘டெவில்’ படத்தில் ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ஏஜென்டாக நடிக்கிறார். கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெற்றிப் படமாக அமைந்த ‘பிம்பிசாரா’ படத்தின் மூலம் பிரபலமான கல்யாண் ராம், இந்த ஆண்டு ‘டெவில்’ படத்தில் நடித்துள்ளார். தேவன்ஷ் நாமா வழங்கும் இத்திரைப்படத்தை, அபிஷேக் பிக்சர்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் நாமா தயாரித்து இயக்குகிறார்.

டெவில் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படம் நவம்பர் 24ம் தேதி ரிலீசாகிறது.

நடிகை சம்யுக்தா இப்படத்தில் கல்யாண் ராம் ஜோடியாக நடிக்கிறார். சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு, டெவில் படத்தில் அவரது நிஷாதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.