இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தனுஷ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவ்ராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷன், மூத்த தமிழ் நடிகர் நாசர், பாலசரவணன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடனும், நெற்றியில் வடியும் ரத்தத்தோடும், நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு மத்தியில் தனுஷ் நிற்கும் தோற்றத்தை கண்டு அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.
இப்படத்ம் 1980களில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் கேஜிஎப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.