சென்னை: டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கி உள்ள இந்த படத்தில் நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டோவினோ தாமஸ் தயாரித்துள்ளார். போரை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.படம் குறித்து பேசியுள்ள படத்தின் இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன், ‘இது போருக்கு எதிரான திரைப்படம். மேலும்,வாழ்க்கை, மரணம், பயம், நம்பிக்கை, உதவியற்ற தன்மை, அன்பு, வெறுப்பு, கனவுகள் போன்ற உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகளை குறித்தும் படம் ஆழமாக பேசும். குறிப்பாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக்கும்’ என்றார்.
54