சென்னை: தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன், தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில், இப்படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பிரியங்கா மோகன் ஆடினார். இப்பாடல் படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தப்படுகிறது. தனுஷின் சகோதரி மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாக, முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது.