சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், அஞ்சலி. தற்போது சில வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். இதுவரை 49 படங்களில் நடித்துள்ள அவர், தற்போது 50வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற் கான போஸ்டர் வெளியிடப்பட்டு,‘ஈகை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கிரீன் அமியூஸ்மெண்ட், டி3 புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. அசோக் வேலாயுதம் இயக்குகிறார். தர் ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசை இமைக்கிறார்.
84