பனாஜி: மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். 54வது கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ‘காதல் தி கோர்’ படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இந்த படம் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இதில் மம்மூட்டி, ஜோதிகா தம்பதியாக நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை ரிலீசுக்கு முன்பு பட விழாக்களில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
88