சென்னை: ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய தமிழ்ப் படங்களை தொடர்ந்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான படம், ‘ஹாட் ஸ்பாட்’. இப்படத்தின் வெற்றி விழாவில் ஜனனி பேசுகையில், ‘இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கிடம் கதை கேட்டது முதல் ஷூட்டிங் முடியும் வரை, அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு டார்ச்சர் செய்து இருக்கிறேன். அதற்கு பொறுமையாக இருந்த அவர், ‘என்னை நம்புங்கள்’ என்று ஆதரவு கொடுத்து படத்தை உருவாக்கி முடித்தார்’ என்றார்.
விக்னேஷ் கார்த்திக் பேசும்போது, ‘நல்ல படம் என்றால் நமது ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்ற விஷயம், எங்கள் படத்தின் வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் 2வது பாகம் உருவாகும்’ என்றார். உடனே அப்படத்தை இயக்குவதற்கான அட்வான்ஸ், காசோலை மூலம் அவருக்கு வழங்கப்பட்டது. இசை அமைப்பாளர் வான், நடிகர்கள் திண்டுக்கல் சரவணன், அமர், சுபாஷ், நடிகை சோபியா, கேஜேபி டாக்கீஸ் பாலமணிமார்பன், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், செவன் வாரியர்ஸ் சுரேஷ் குமார் கலந்துகொண்டனர்.