தமிழில் ரஜினிகாந்துடன் `காலா’, அஜித் குமாருடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. தற்போது உடல் எடை அதிகரித்துள்ள அவர் கூறுகையில், ‘நீங்கள் அழகிய முகம் கொண்ட சிறந்த நடிகை. ஆனால், முக்கிய கேரக்டரில் ஹீரோயினாக நடிக்க, 5 கிலோ எடை கூடுதலாக இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள்.
நான் என்ன உடை அணிந்திருக்கிறேன் என்று கவனிப்பார்கள். எனது உடல் பாகங்கள் சிலவற்றைப் பெரிதாக்குவது, அவற்றைச் சுற்றி வட்டமிடுவது என்று பலவற்றைச் செய்வார்கள்’ என்று வருத்தப்பட்டுள்ளார். திடீரென்று எதற்காக அவர் இவ்வளவு மன உளைச்சலுடன் பேசுகிறார் என்று நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.