தமிழில் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ரவி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘கேடி’ என்ற படத்தில் அறிமுகமானவர், இலியானா. பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ‘நண்பன்’ படத்தில் நடித்த அவர், தொடர்ந்து தெலுங்கிலும், இந்தியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், திடீரென்று அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். அவரது கணவர் யார் என்று சொல்லவில்லை. இதனால், இலியானாவின் காதல் கணவர் யார் என்ற சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது. கடந்த 1ம் தேதி இலியானா வெளியிட்டிருந்த பதிவில், தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்தார். அப்போது கூட தனது கணவர் யார் என்று அவர் சொல்லவில்லை. பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைப் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாக முன்னதாக வதந்தி பரவியிருந்தது. இந்நிலையில், அத்தகவலை இலியானா உறுதி செய்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 13ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களுடைய ஒரே மகனுக்கு ‘கோயா பீனிக்ஸ் டோலன்’ என்று பெயரிட்டுள்ளனர்.
178