லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில், லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இது நாளை வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வகையில், கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ என்ற படம் திரையிடப்படுகிறது.
பார்வதி திருவோத்து, ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சன்செட் பவுல்வர்டு தியேட்டரில் இன்று திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பார்வதி திருவோத்து கலந்துகொள்கிறார். தவிர, திரைப்பட விழாவின் இறுதி நாளில், தமிழில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிபெற்ற ‘மகாராஜா’ படம் திரையிடப்படுகிறது.