லாஸ்ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. இப்படம் இந்த ஆண்டு ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது. இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு ஜப்பான் நாட்டில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ போஸ்டர் ஒன்றில், படத்தின் நாயகன் சிலியன் மர்ஃபிக்கு பின்னால் டவர் ஒன்று இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னால் வெளியான அசல் போஸ்டர்களில் நாயகனுக்கு பின்னால் அணுகுண்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அது, ஜப்பான் மக்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படும் என்பதாலேயே போஸ்டரில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதாம். ஜப்பானில் வரும் 29ம் தேதி வெளியாகிறது.