ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து நடிக்கும் படம் ‘ரெபல்’. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் நிகேஷ் கூறும்போது “இது கேரளா மற்றும் தமிழ்நாட்டு எல்லையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மக்களுக்காக போராடிய ஒரு இளைஞனாக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். வளர்ந்து வரும் மலையாள நடிகை மமிதா பைஜு கதை நாயகியாக நடித்துள்ளார்” என்றார். பாலக்காட்டில் மலையாள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் தொழிலாளர்களுக்கும் நடந்த ேமாதல் பின்னணியில் படம் உருவாகி இருப்பதை படத்தின் டீசர் வெளிப்படுத்துகிறது.