தெலுங்கு சீனியர் நடிகர் மோகன் பாபுவின் மகள், லட்சுமி மன்ச்சு. தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘கடல்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் நடித்தார். பல படங்களைத் தயாரித்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார். தற்போது மோகன் பாபு நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தில் அவரும் நடிக்கிறார். பான் இந்தியா படமான இதை அவரே தயாரிக்கிறார். போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால், இதற்கு முன்பு சில ஹீரோயின்கள் போலீஸ் கேரக்டரில் எப்படி நடித்தனர் என்பதை பார்த்திருக்கிறார் என்றாலும், தனித்துவமான மேனரிசங்களுடன் தனது போலீஸ் கேரக்டரில் நடிக்கும் அவர், அந்த கேரக்டரை அறிமுகப்படுத்தும் பாடலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மன்ச்சு கூறுகையில், ‘நான் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் எனது கேரக்டர் சிறப்பாக வர, பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் ஒரு காரணம். அவரது போலீஸ் படங்களின் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நான், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் காட்சிகளை அதன் பாதிப்புடன் நடித்திருக்கிறேன். போலீஸ் வேடத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதுடன், அப்படி நடிப்பதை எனது கடமையாகவும் நினைக்கிறேன்’ என்றார்.