ஐதராபாத்: தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நவ்தீப் (37), தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் ஆர்யா தம்பியாக நடித்தார். பிறகு ‘நெஞ்சில்’, ‘ஏகன்’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’, ‘சீறு’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நவ்தீப், சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற அவர், தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்கச் சென்ற தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா, வீட்டில் நவ்தீப் சோர்வுடன் அமர்ந்திருப்பதை கிண்டல் செய்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து நவ்தீப் விரைவில் குணமடைய வேண்டும் என்று, அவரது ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.