சென்னை: இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி என விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். இந்த படத்துக்கு ‘டீன்’ (Teen) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும் என இமான் தெரிவித்து பார்த்திபனுடன் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
64